Oh Rain...!!! Are you a woman !!!
கரியடர் கூந்தனினள் தலையோடு நீராடி, அது துவட்ட நீர் கொட்டி, பின் சொட்டி, நாள்முழுதும் ஈரம் கசிய....
இவ்வாறு பன்முறை நீராடினள், உள்ளத்தோடு உடலும் தூயதாகி, அன்று துலக்கிய குத்துவிளக்கென சுடர்விட்டனள்....
அழகு மிளிற, அதை மனதரினம் பார்த்து பரவசமடைய, செயல் மற்றும் மனவேகம் தடைப்பட்டாலும், நாட்கள் நகர்ந்தன....
பெண் கண்ணீர் பெருக்கெடுத்தால் மனிதனும் மாய்வானென, ஆங்காங்கு சிலர் அடித்தும், மடிந்தும் போயினர்....
ஒரு மாதம் தாய்வீடு சென்று திரும்பினள் காதலி, ஆறத்தழுவ இருவருக்கும் ஆசை, ஆதவன் அப்புறம் செல்ல, கார்மேகம் போர்வையாக, நிகழ்கிறது காதல்.....
மழையே நீ என்ன பெண்ணா!!!
No comments:
Post a Comment